“ஆவணி அவிட்டம் பூ நூல்” மாற்றுவது ஏன்..? எந்த வயதினருக்கு எந்த பூ நூல்..?
ஆவணி அவிட்டம் என்பது “ரிக், யஜூர் வேதம்” தெரிந்த வேதியர்கள் மட்டுமே பூணூல் மாற்றிக்கொள்ளும் நாளை ஆவணி அவிட்டம் என அழைக்கிறார்கள்..
ரிக், யஜுர் வேதங்களை வழிபடுவதற்குரிய இந்த நாளில் பூணூல் மாற்றிக் கொண்டால் என்ன பலன்கள் கிடைக்கும் மாற்றுவதற்கான நல்ல நேரம் எது..? இந்த நாளில் நடத்தப்படும் உபகர்மா சடங்கி என்றால் என்ன என்பது பற்றி இதில் படிக்கலாம்..
ஆவணி அவிட்டமானது பிராமணர்கள் கொண்டாடும் மிக முக்கியமான நாளான ஒன்றாக உள்ளது… ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே ஆவணி அவிட்டம் என சொல்லப்படுகிறது… ஆவணி அவிட்டத்தில் வேதங்கள் அவதரித்த நாளாகவும், பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்த நாளாகவும் வேதங்களை அசுரர்களிடம் இருந்த மீட்ட நாளையே ஆவணி அவிட்டமாக ஆன்மீக வரலாறு சொல்கிறது.
பூ நூல் மாற்றி வேதங்கள் கற்க தொடங்குபவர்களுக்கு “உபகர்மா” என அழைப்பார்கள்.. உபகர்மா என்பது “உபம்” மந்திரங்கள் உச்சரிப்பு.. “கர்மம்” என்பது கண்கள்.. நமக்கு இருக்கும் இரண்டுகள் மட்டுமின்றி மூன்றாவது கண்ணீன் மூலம் மந்திரத்தை உச்சரிப்பதையே உபகர்மம் என அழைக்கிறார்கள்.. இதனால் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான பந்தத்தை ஏற்படுத்தும் வழிகாட்டுதலையே “உபகர்மா” என அழைப்பார்கள்..
ரிக்,யஜூர், சாம, அதர்வணம் என்று நான்கு வகையான வேதங்கள் உண்டு. இவற்றில் ரிக், யஜூர் ஆகிய இரண்டு வேதங்களும் மேஷம் துவங்கி துலாம் வரையிலான ராசிகளுக்கு உரியவை. சூரிய பகவான், சிம்ம ராசியில் பயணிக்கும் ஆவணி மாதத்தில் ரிக், யஜூர் வேதங்கள் தோன்றியதாக சொல்லப்படுகிறது.. இந்த மந்திரங்களை முழுவதுமாக கற்றுக்கொண்டவர்களை மீண்டும் அவர்களை புதுப்பித்து கொள்ளும் நாளையே “ஆவணி அவிட்டம்” என அழைக்கிறார்கள்..
ஆவணி அவிட்டம் செய்யும் நேரம் :
இன்று ஆவணி அவிட்டம் நாளில் அதிகாலை 03.07 மணிக்கு துவங்கி, மறுநாள் நள்ளிரவு 01.09 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. அதாவது ஆகஸ்ட் 19ம் தேதி அதிகாலை 03:07 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 20ம் தேதி துவங்கும் நேரமான நள்ளிரவு 01:09 மணிக்கு முடிகிறது…
அதேபோல் ஆகஸ்ட் 19ம் தேதி காலை 09.09 மணிக்கு பிறகு ஆவணி அவிட்டம் நட்சத்திரம் துவங்குகிறது. அன்று துவங்கி.. ஆகஸ்ட் 20ம் தேதி காலை 07.50 மணிக்கு முடிகிறது.. இருப்பினும் பிரம்ம முகூர்த்தத்தில் பூ நூல் மாற்றினால்.. சிறந்த பலன்கள் கிடைக்கும்.
பிரம்ம முகூர்த்தமானது.., அதிகாலை 04.32 மணி துவங்கி, மறுநாள் காலை 05.20 மணி வரை பிரம்ம முகூர்த்தம் இருப்பதால்.. அந்த நேரத்தில் அனைத்து நட்சத்திரகாரர்களும் பூணூல் மாற்றிக்கொண்டால்.., சிறந்தது என சொல்லப்படுகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..