ஏடிஎம் களில் பணம் மற்றும் உணவு பொருட்களை எடுத்துதான் பார்த்திருப்போம் ஆனால் ஹைதராபாதில் தனியார் நிறுவனம் ஒன்று தங்க நகையை வாங்கும் வசதியுடைய ஏடிஎம் ஒன்றை வடிவமைத்து அதில் வெற்றி பெற்றுள்ளது.
உலகில் முதல் முறையாக சாக்லேட் மற்றும் குளிர்பானங்களை வாங்கும் எந்திரமாகத்தான் ஏடிஎம் இருந்து வந்தது காலபோக்கில் கார்டை தேய்த்து பணத்தை பெரும் எந்திரமாக மாற்றப்பட்டு உலக முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோல்ட்சிக்க என்ற நிறுவனம் தங்க நகையை 24 மணிநேரமும் வழங்கும் ஏடீமை திறந்துள்ளது.இந்த ஏடிஎம் மூலம் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ தங்கத்தை இருப்பாக வைத்து கொள்ளும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் தேவையான தங்கத்தை ஏடிஎம்மில் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகிலேயே இதுதான் முதல் தங்கம் வாங்கும் ஏடிஎம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் நகைக்கடைகளுக்கு சென்று தங்கம் வாங்கும் பழக்கம் குறைந்து எளிதாக ஏடீமில் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று இந்த ஏடிஎம் எந்திரத்தை பற்றி தெரிந்தவர்கள் தேர்விக்கின்றனர்.