ஏன் தெய்வங்களுக்கு இரண்டு மனைவிகள்..?
தெய்வங்களின் மனைவியார்களை “மர்க்கட நியாயம் – மார்ஜால நியாயம்” என்று கூறுவார்கள்.
தெய்வங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களில் முக்கியமானது இது.
இரண்டு மனைவிகளில் ஒன்று கடவுளை தேடிவந்தது… மற்றொன்று கடவுளே தேடிப்போனது.
தெய்வத்தை அடைய வழி காட்டும் பக்தி நிலைகளை அறிவிக்கக் கூடியவர்கள் இந்த இரு மனைவியர்.
மர்க்கடம் என்பது குரங்கு ஆகவும், மார்ஜாலம் என்பது பூனை ஆகும்.
குரங்கு குட்டி தான் தன் தாயின் அடிவயிற்றை கவ்விப் பிடித்திருக்குமே தவிர, தாய் குரங்கு தன்னுடைய குட்டியை பிடித்துத் தூங்காது.
மேலும் தாய் குரங்கு மரத்திற்கு மரம் தாவும்போது, கவ்விக்கொண்டிருக்கும் குரங்கு குட்டி கீழே விழுந்தால், அக்குட்டியை தாய் குரங்கு மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்ளாது.
“விசுவாமித்திரர்” செய்தது போல தெய்வத்தை அடைய நாம் யாகம்,தவம்,கடும் விரதங்கள் மேற்க்கொள்ளும் போது தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
மார்ஜாலம் என்பது பூனை,பூனைக்கு பிரச்சனை கிடையாது.
பூனைக்குட்டி தாயை பிடித்துக்கொள்ளாது, குட்டியானது இருந்த இடத்தில் இருந்தே “”மியாவ்”” என்று மெதுவாகத்தான் கூப்பிடும் ஆனால் தாய்ப்பூனை உடனே ஓடிவந்து தன் குட்டியை தன் வாயால் கவ்விக்கொண்டு பாதுகாப்பாக தூக்கிச் செல்லும். இதுமாறிதான் பொறுப்பு தெய்வத்தினுடையது.
இந்த இரு விதமான பக்தி முறைகளை தான், இருவிதமான சக்தி மனைவிகளாக சொல்கிறார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..