கண்களில் அடிக்கடி கண்ணீர் கசிவதற்கான காரணம் ஏன்..?
ஒரு சிலருக்கு இயல்பாகவாவே கண்களில் கண்ணீர் கசிவது வழக்கம்.., அதற்கு காரணம் பலரும் சொல்லுவது வைட்டமின் குறைபாடு. வைட்டமின் குறைபாடு இருந்தாலும் மேலும் சில காரணங்களும் இருகின்றது. அதை நம் செய்யாமல் தடுத்தாலே கண்களில் நீர் வடிவதை குறைத்து விடலாம்.
கண்களில் அடிக்கடி நீர் வடிந்தால்.., அது அலர்ஜியா என்று நாம் முதலில் கண்டறிய வேண்டும். பின் அதற்கான காரணம் குறித்து ஒவ்வாமையை என்று அறிய வேண்டும். ஒவ்வாமையாக இருந்தால் அதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
* அதிகாமாக மொபைல், லேப்டாப், டிவி பார்த்தால் கண்ணீர் வரும். சிலருக்கு கணினியில் அதிக நேரம் வேலை இருக்கும். அப்படி அதிக நேரம் வேலை செய்பவர்கள்.., ஒரு மணிநேரத்திற்கு ஐந்து நிமிடமாவது.. கணினி பார்க்காமல் அதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
* கண் வறட்சி அதிகமானால் கண்ணீர் வடியும் அப்பொழுது.., அடிக்கடி முகத்தில் wipes பயன் படுத்தி முகத்திற்கு ஈரப்பதம் கொடுக்கலாம்.., அல்லது முகம் மற்றும் கண்களை குளிர்ந்த நீரால் கழுவலாம்.
* அதிக நேரம் குளிருந்த காற்று இல்லாத இடத்தில் இருக்க வேண்டும்.., அது உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கும் வறட்சியை ஏற்படுத்தும்.
* கண்கள் அதிக ஒளியை பார்க்க வேண்டாம்.. இது கண்களின் பிம்பத்தை அதிகம் பாதிக்கும்..
* கண் அலர்ஜி ஏற்பட்டால். அடிக்கடி கண் சிவந்து விடும், அப்படி அடிக்கடி கண்கள் சிவந்தாள் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்..