சனிக்கிழமை என்ன காரியங்கள் செய்யக்கூடாது அது ஏன்..?
சனிபகவானுக்கும் வெங்கடேச பெருமாளுக்கும் உகுந்த தினமான சனிக்கிழமை அன்று நாம் தெரியாமல் செய்யும் சில தவறான செயல்கள் துரதிஷ்டத்தை அளிப்பதோடு மேலும் கஷ்டங்களை கொடுக்க கூடும். அது எந்த வகையான பொருள்கள் என்று பார்க்கலாம்.
இரும்பு :
சனிக்கிழமை அன்று இரும்பு சம்மந்தமான பொருள்கள் வாங்கக்கூடாது. இரும்பு என்பது சனிபகவானுக்கு ஆதிக்கம் செலுத்தும் பொருள், எனவே சனிக்கிழமை அன்று நாம் இரும்பு சம்மந்தமான பொருள்கள் வாங்கினால், குடும்பத்தில் தேவையில்லதா சண்டை, உறவினர்களுக்குள்ளே பிரச்சனை போன்றவை ஏற்படக்கூடும்.
ஆனால் அந்த இரும்பை மற்றவர்களுக்கு கொடுத்தால் கடன் தொல்லை தீர்ந்து விடும். எனவே அதிக கடன் தொல்லை இருப்பவர்கள் மற்றவர்களுக்கு இரும்பை தானமாக கொடுத்தால் கடன் தொல்லை தீர்ந்து விடும்.
எண்ணெய் :
சனிக்கிழமைகளில் எண்ணெய் வாங்க கூடாது. சனி நீராடினால் தோஷம் நீங்கும் என சொல்லுவார்கள்.
எனவே சனிக்கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் நீங்கும் என்பது உண்மையாக என்றாலும். சனிக்கிழமை எண்ணெய் வாங்குவது தவிர்க்கலாம்.
உப்பு :
சனிக்கிழமைகளில் உப்பு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரங்களில் நஷ்டம் ஏற்படும். அதுவே வெள்ளிக்கிழமை களில்.., உப்பு வாங்கி பூஜை அறையில் வைத்தால் மகாலட்சுமி வீட்டில் நிலைத்து இருப்பார் என்பது ஐதீகம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மிக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..