மார்க்கெட்டில் உயரும் நடிக்கருக்காக நாம் ஏன் இதை செய்ய வேண்டும்..?
உலகில் வெறெங்குமே காண முடியாத சில பைத்தியகாரதனத்தை நம் ஊரில் மட்டுமே பார்க்க முடிகிறது.. அது போன்ற பைத்தியகாரதணங்களை பார்க்கும் போது.. ஒவ்வொரு முறையும் ஒரு தமிழன் என்ற நிலையில் இருந்து நான் வெட்கித் தலை குனிந்து நிற்கிறேன்.
சினிமா பார்ப்பது, நடிகர்களை கொண்டாடுவதை மட்டும் நான் சொல்லவில்லை.. அதையும் தாண்டி பல இருக்கிறது.. ஆனால், சில கூட்டமொன்று எல்லை கடந்துபோய் பைத்தியக்காரத்தனமாக அவர்கள் பின்னால் அலைவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது..
சினிமா எடுப்பது மட்டுமின்றி அதில் நடிப்பதும் பணம் சம்பாதிக்க செய்யும் ஒரு தொழில் என்றும் மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு தொழில் என்றும், பெரும் பொருளீட்ட வாய்ப்பு இருப்பதால் அதை பலரும் செய்கிறார்கள்
இதில் நடிகன் என்பவன் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் மிகக் குறுகிய காலத்திற்குள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கோடிகளில் குவிக்க முடியும் என்பதால் இந்தத் தொழிலில் எல்லாருக்குமே பெரிய ஈர்ப்பு உள்ளது..
வெறும் 40-50 நாட்கள் மட்டும் வேலை செய்து(அதுவும் பல நூறு பேர்களின் ஒத்துழைப்போடு) நூறு கோடியெல்லாம் சம்பளம் பெறுவது சமூக சேவைக்காகவா? இல்லை பண வெறியா? அப்படி அவர்கள் செய்யும் ஒரு வணிகம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக 40-50 வயதுள்ள பல ஆண்கள் தங்கள் கல்வி, தொழில், குடும்பம், சமூக மரியாதை எல்லாவற்றையும் மறந்துவிட்டு தனக்குப் பிடித்த ‘நடிகனின்’ படம்.
வெற்றி பெற வேண்டும் என்று அவனது படத்தைக் கையில் ஏந்திக் கொண்டு கோவில் கோவிலாகப் போய் பூஜை செய்வதையும், வேண்டுதல் செய்வதையும் பார்க்க அருவருப்பாக, கூச்சமாக உள்ளது..
இப்படிப்பட்ட ஆண்கள் எப்படி..? தங்கள் குழ்ந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணமான தகப்பனாக இருக்க முடியும். நல்ல மகனாக..? நல்ல கணவனாக.? பொறுப்புள்ள நல்ல குடிமகனாக..?
சமூகத்தில் நம்மைச் சுற்றி எவ்வளவோ அவலங்கள், கொடுமைகள் தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கின்றன… அதைப்பற்றியெல்லாம் துளிகூடக் கவலைப் படாதவர்கள் கவனம் செலுத்தாதவர்கள் தனக்குப் பிடித்த நடிகனின் படம் வெற்றிபெற வேண்டும் என்று பைத்தியக்காரர்களாக அலைகிறார்கள்.
இதனால் பயன் பெறுவது அந்த நடிகன் மட்டுமே! இதையெல்லாம் செய்யும் ரசிகனுக்கு அந்தப் படத்திற்கான டிக்கட்கூட இலவசமாகக் கிடைக்காது.. அவனும் ரூ500-1000 ம் கொடுத்தால்தான் பார்க்க முடியும்.. படம் வெற்றிபெற்றால் நடிகனின் மார்க்கெட் மேலும் உயரும்.. அவன் 100 கோடிக்கு பதில் 150 கோடி கேட்கப் போகிறான்.. உனக்கு என்ன கிடைக்கும்..
மூடர் கூட்டமே முட்டைக்கு மயிர் பிடுங்கும் இதுபோன்ற இழிவான செய்லகளில் ஈடுபடாமல் இந்த நேரத்தை, இந்த உழைப்பை, உன்னை நேசிக்கும் குடும்பத்தினருக்காக உன் தாய்-தந்தைக்காக, மனைவிக்காக, உன் குழந்தைகளுக்காகச் செலவிடு! எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டிகளாக இல்லையென்றால் கூட பரவாயில்லை! அவமானச் சின்னங்களாக அலையாதீர்கள்..
இது தனிப்பட்ட ஒரு குழுவைப்பற்றி மட்டுமல்ல, சினிமாப் பைத்தியம் பிடித்து நடிகன்களின் காலடியில் கிடக்கும் எல்லா அடிமைகளுக்கும்தான் சொல்கிறேன்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..