கடந்த 1990 ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்திலும் சிம்ரன் நடித்து வருகிறார்.
படங்களில் பிஸியாக இருக்கும் சிம்ரனுக்கு சமீபத்தில் விருது வழங்கப்பட்டது. விருது பெறும் விழாவில் கலந்து கொண்ட சிம்ரன் பேசும்போது நடிகை ஒருவர் பேசிய விஷயங்களை பற்றிய உண்மையை உடைத்துள்ளார் .
நான் சமீபத்தில் எனக்கு நெருக்கமான ஒரு நடிகையிடம் இந்த படத்தில் ஏன் இந்த கதாபாத்திரத்தில் நடித்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அந்த நடிகை உங்களைப் போல ஆன்டி போன்ற வேடங்களில் நடிப்பதைவிட இது சிறந்தது என பதில் கூறினார். எனக்கு இதனை கேட்டவுடன் என்ன இவர் இப்படி பேகிறார் என்று கருதினேன். அவரிடம் இருந்து இந்த மாதிரி புரிதல் இல்லாத பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
நான் 25 வயதிலேயே முக்கியமான ‘ஆன்டி’ கதாபாத்திரத்தமான கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் நடித்திருந்தேன். டப்பா கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான ’ஆன்டி’ கதாபாத்திரத்தில் நடிக்கலாம்” என்றும் சிம்ரன் கூறினார்.
எனினும் அந்த நடிகை யார் என்கிற விவரத்தை சிம்ரன் சொல்லவில்லை . இதனால், யார் அந்த நடிகை என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.