அந்த தொகுதியில் மட்டும் ஏன் இவ்வளவு போட்டி..? கோட்டையில் கொடியேற்றப்போவது இவரா..? மக்களின் வாக்கு..?
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி நாளுக்கு நாள் மக்கள் மனதில் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதே சமையம் கட்சி வேட்பளார்களும் அதற்கு ஏற்றார் போல தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திமுக இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் வேலூர் தொகுதி வேட்பளார் கதிர் ஆனந்த் மற்றும் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் இதே வேட்பளார்கள் வேலூர் தொகுதியில் களத்தில் இறங்கினார்கள். ஆனால் திமுக தரப்பில் நின்ற கதிர் ஆனந்த் ஏசிசண்முகத்தை விட 8560 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் பாஜக தரப்பில் போட்டியிடும் வேலூர் தொகுதி வேட்பாளர் ஏசிசண்முகம் டிடிவி.தினகரனை தோற்கடித்து விடுவார் என சொன்னாலும் அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெறுவாரா வேலூர் மக்களின் ஆதரவு யாருக்கு என பார்க்கலாம்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற திமுகவின் கதிர் ஆனந்த் இந்த முறையும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அந்த பகுதியில் மக்களின் ஆதரவும் கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் கிடைப்பது மிக சிரமம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கதிர் ஆனந்த் 8,141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட பாஜக ஏ.சி.சண்முகம் இந்த முறையும் போட்டியிடுகிறார். புதிய நீதிக் கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகம் கடந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம் பெற்று, இரட்டை இலை சின்னத்தில் வேலூரில் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை பாஜக கூட்டணியில் இணைந்திருக்கும் அவர், தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
வேலூரில் காட்பாடி, அணைக்கட்டு, கே வி குப்பம், குடியாத்தம், கலவை, என ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் நான்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. வேலூரில் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களின் தொகை அதிகம். இந்த தொகுதியில் இருக்கும் சுமார் 3 லட்சம் இஸ்லாமிய வாக்காளர்களையே திமுக பெருவாரியாக நம்பியுள்ளது. கடந்த முறை இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியிலேயே கதிர் ஆனந்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. இதனால் பாஜகயிடையே பெரும் போட்டி ஏற்பட்டது.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் :
வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்திற்கு அப்பகுதியில் மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
கடந்த முறையை விட இந்தமுறை இன்னும் அவருக்கு மதிப்பு கூடிவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாதக வேட்பாளர் மகேஷ் ஆனந்திற்கு கடந்த முறை நடந்த தேர்தலில் 45,357 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார் ஆனால் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை மீண்டும் மகேஷ் ஆனந்த் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். இந்த முறை மகேஷ் ஆனந்த் சீமானின் உத்தரவின் பெயரில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்களை சேர்த்து கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
100 இளைஞர்கள் மட்டுமே இருந்த இடத்தில் ஒரு வாரத்தில் 200 இளைஞ்சர்கள் இவர் பக்கம் சேர்ந்திருப்பது பாஜகயிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம், கடந்த இரண்டு முறையும் திமுகவிடம் தோற்று போனார்.
இந்த முறை ஏசி.சண்முகம் அளித்த தேர்தல் வாக்குறுதியில் தனிப்பட்ட முறையில் நிறைய மக்களுக்கு பொது உதவிகள் செய்திருப்பதாகவும், இந்த முறை வெற்றி பெற்றால் இன்னும் நிறைய செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
வேலூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ் பசுபதி மருத்துவர் தனது அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிடுகிறார்.
கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் கூட இல்லாத பசுபதி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் பரபரப்பான சூழலில் ஒவ்வொரு தொகுதிகளுக்கும் சென்று நம் மதிமுகம் ரிப்போட்டர் எடுத்த சர்வேயின் மூலம் மக்களின் ஆதரவு முதல் இடத்தில் இருப்பது “திமுக” என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற தேர்தலில் வேலூர் கோட்டையில் கொடி நாட்ட போவது “திமுக வேட்பளார் கதிர் ஆனந்த்” வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..