பாட புத்தகங்களின் விலை ஏற்றம் ஏன்? விளக்கம் தந்த அமைச்சர்!
பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகத்தை, தமிழக அரசு தான் அச்சிட்டு வழங்கி வருகிறது. இதில், அரசு பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், இலவமாக புத்தகங்கள் வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இவ்வாறு விற்பனை செய்யப்படும் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டதாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விலைவாசி உயர்வு, அச்சிடப்படும் செலவுகள் ஆகியவற்றின் காரணமாக, புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டதாக, முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த விலை உயர்வு குறித்து, தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, விலை ஏற்றம் ஏன் என்பதை விளக்கும் வகையில், அன்பில் மகேஷ் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “018 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும். மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
எனவே அந்த விலையேற்றங்களை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்