Exclusive Today Trending அரசியல் இந்தியா தமிழ்நாடு

குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிறுத்தியது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி

குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிற்க அனுமதித்தது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தெரிவிக்கவேண்டும் என்றும், செய்தித்தாள், தொலைக்காட்சி வாயிலாக குற்ற வழக்குகளை விளம்பரம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதனை முறையாக கடைப்பிடிக்கவில்லை என கூறி, தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகியும் வழக்கறிருமான அஷ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எஃப்.நரிமன், எஸ்.ரவீந்திர பட் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பின்னணி அல்லது குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிற்க அரசியல் கட்சிகள் அனுமதித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வெற்றிபெறுவது மட்டுமே ஒரு வேட்பாளரின் திறன் ஆகிவிடாது என குறிப்பிட்டனர். வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்றும், எம்.பி., எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் வெளியிட வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

வேட்பாளர்களின் கிரிமினல் வழக்குகள் குறித்த விவரத்தை இணையத்தில் பதிவேற்றிய 72 மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் குற்றப்பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்த காரணங்களையும், வெற்றி வாய்ப்பை தாண்டி வாய்ப்பு தந்ததற்கான காரணத்தையும் கட்சிகள் வெளியிடவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை கட்சிகள் பின்பற்றாத போது தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

மெரினாவில் உள்ள கடைகளின் வாடகை குறித்து அறிக்கை தாக்கல்

Digital Team

கத்தி, துப்பாக்கியுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள் கைது!

Digital Team

காக்னிசெண்ட் நிறுவனத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Digital Team

மீண்டும் கவர்ச்சி, லிப்லாக் கோதாவில் களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார்!

Digital Team

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

Digital Team

தமிழக சட்டசபை அடுத்த மாதம் மார்ச் 9 ஆம் தேதி கூடுகிறது !

superadmin
You cannot copy content of this page
Madhimugam