சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது ஏன்..? பூர்வ ஜென்ம பூவங்களை போக்க இதை செய்ய மறக்ககாதீங்க..!!
வில்வ இலைகள் இல்லாமல் சிவனின் பூஜை முழுமை அடையாது என சொல்லுவார்கள்.. மற்றும் நம்மை பிடித்த தோஷங்கள் நீங்கி சிவபெருமானின் அருள் பார்வை கிடைக்க வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்கு இந்த வரங்கள் கிடைக்கும் என பல புராண கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது..
சிவன் என்றால் அழிக்கும் கடவுள் என சொல்லுவார்கள்., ஆம் சிவன் அழிக்க கூடிய கடவுள் தான்.., “நம் தீயவினைகளை அழித்து., நம் பாவங்களை அழித்து., கெட்ட சக்திகளை அழிக்க கூடிய கடவுள் தான் “சிவன்” சிவனை நம்பினோர் கை விடப்படார் என்ற வாசகமும் உண்டு..
சிவனை நாம் முறையாக வழிபட்டால்.. துன்பங்களில் இருந்து விலக்கி நம்மை காப்பாற்றுவார் என சொல்லப்படுகிறது.. அப்படியாக சிவனுக்கு நாம் செய்ய வேண்டிய பூஜைகள் பற்றி பார்க்கலாம்…
வில்வம் இலைகள் பற்றி பல புராணக்கதைகளிலும் குறிபிடப்பட்டுள்ளது., சிவபெருமானின் புகழ்பெற்ற பில்வாஷ்டகம் எனும் சிவனுக்கு உகுந்த ஸ்தோத்திரத்தில் வில்வ இலையின் சிறப்புகளையும், சிவபெருமானின் விருப்பத்திற்கு உகந்ததாக கருதப்படும் காரணத்தையும் விவரிக்கிறது.
சிவனின் வில்வ இலை அர்ச்சனை பயன் :
சிவபெருமானை தரிசிக்கும் போது அவருக்கு வில்வ இலைகள் கொண்டு நாம் அர்ச்சனை செய்தால் அது நமக்கு கோடி புண்ணியத்தை கொடுக்கும்
அதேபோல் சிவ பூஜையில் வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் விலகி தோஷங்களும் நீங்கி விடும் என சொல்லப்படுகிறது..
அதே போல் வில்வ இலைகளை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் சிவபெருமானின் அருள் முற்றிலுமாக கிடைக்கும் என்பது ஐதீகம்..
மற்றும் வில்வ இலைகளை கொண்டு சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவங்களும் விலகி விடும் என்பது ஐதீக உண்மை..
மற்ற இலைகளுக்கு என்று அதன் வடிவமானது இலையாக மட்டுமே இருக்கிறது.. ஆனால் வில்வ இலையானது ஆன்மீக இலை என சொல்லப்படுகிறது அதற்கு காரணம் சிவனுக்கு அர்ச்சனை செய்வதால் மட்டுமல்ல
முக்கூறுகளை கொண்ட இந்த வில்வ இலையானது திரிசூலம் வடிவில் காணப்படுவதாலும் வில்வ இலையானது மூன்று தெய்வத்தை மையமாக கொண்டுள்ளது.. படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு மற்றும் அழிக்கும் கடவுள் சிவன் ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதால் இதனை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்கிறோம்..
சிவனுக்கென்று பல விதமான சக்திகள் இருப்பதாக சொல்லபடுகிறது.. இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளை குறிக்கிறது.
சிவபெருமானுக்கு வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு முன் இதனை கருத்தில் கொண்டு செய்ய வேண்டும் அதாவது வில்வ இலைகளை தூவி பூஜிக்கும் போது வில்வ இலைகள் 3, 5 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு இரட்டை படை எண்களில் அர்ச்சனை செய்யக் கூடாது.
நாம் அர்ச்சனை செய்யக்கூடிய வில்வ இலைகயை தண்ணீரில் சுத்தம் செய்து அதன் மீது சந்தனத்தால் “ஓம்” என எழுதி அர்ச்சனை செய்தால் வாழ்வின் அனைத்து இன்னல்களும் விலகி விடுமாம்
சிவலிங்கத்தின் மீது வில்வ இலையினால் ஆன மாலையை கொண்டு பூஜை செய்து வழிபாட்டால் நாம் கேட்கும் வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீக உண்மை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..