ஆண்கள் பாவம், தட்டி கேட்க யாருமே இல்லையா? – மனைவியால் கலங்கி நின்ற கணவர்
இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மனைவி தனது கணவரின் டி சர்ட்டை பிடித்து கொண்டு அடி வெளுத்து வாங்குகிறார். சாலையில் நின்று பலரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி அந்த கணவர் செய்த தப்பு என்ன? குடித்தாரா? அல்லது தகாத வைத்திருந்தாரா? … அதுவெல்லாம் இல்லை. பணம் சம்பாதிக்க முடியவில்லை. இதற்காகத்தான் அவ்வளவு அடி. மனைவி அவ்வளவு அடித்தும் அவமானப்படுத்தியும் அந்த கணவர் எதுவுமே எதிர்த்து பேச முடியாமல் கலங்கி போய் நின்றார் அந்த மனிதர்.
அங்கிருந்த மற்றவர்களும் அந்த பெண்ணை தடுக்க முன் வரவில்லை. முன்பெல்லாம் ஆண்கள் கொடுமையில் ஈடுபடுவார்கள். ஆனால், கால ஓட்டத்தில் மனைவிகள்தான் இப்போது கணவர்களை கொடுமைப்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். மேலும், இந்த பெண்ணுக்கு கணவரை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது? இதே போன்று ஆண்கள் தங்கள் மனைவியை இப்படி சாலையில் வைத்து அடித்தால் போலீசார் விட்டு விடுவார்களா? எப்போதுமே, சட்டம் பெண்களுக்கு சாதகமாகே இருக்கிறது என்றும் சிலர் குறை கூறியுள்ளனர்.
சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த அதுல் சுபாஷ் என்ற 34 வயதான ஐ டி ஊழியர், தனது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் போலி வழக்குகளால் தன்னை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியதோடு, நீதித்துறையை சாடியும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம் .