‘சம்மதித்தால் இருவருடனும் வாழ்வேன்’! – காவலர் மீது மனைவி புகார்

இருவருடனும் சேர்ந்து வாழ்வேன் என்று கூறுவதாக, காவலர் ஒருவர் மீது அவரது மனைவி அளித்துள்ள புகார் குறித்து சென்னை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சத்தியவாணி என்பவர், தமிழகக் காவல்துறை டிஜிபி அலுவலகம், சென்னை ஆணையர் அலுவலகம், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய இடங்களில் அவரது கணவர் ராஜா மீது புகார் அளித்துள்ளார்.

அதில், தனக்கும் சிவகங்கை மாவட்டம், மேலபூவந்தியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் 27.10.2017 அன்று சென்னை வடபழனி கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. இருவரும் திருமங்கலத்தில் குடியிருந்ததாகவும், ராஜா சென்னையில் காவலராக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இருவருக்கும் 2019 ஆம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது, பின்னர் திடீரென அந்த குழந்தையும் இறந்துவிட்டது. அதன் பின்னர் ராஜாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.

இதையடுத்து ராஜாவின் அம்மாவை போனில் தொடர்புகொண்டு தங்களது திருமணத்தைப் பற்றி கூறினேன். ஆனால், அவரோ! ‘என் மகனுக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துவிட்டதாக தெரிவித்தார்”. இதுகுறித்து ராஜாவிடம் கேட்டபோது, `நீ சம்மதித்தால் உங்கள் இருவரையும் வைத்து வாழ்வேன்’ என்று தன்னிடம் கூறுவதாக, ராஜா மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்தியவாணி புகாரளித்துள்ளார்.

ஆனால், போலீசார் ராஜா மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவும், “நான் போலீஸ், என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது என ராஜா மிரட்டுவதாக” சத்தியவாணி தெரிவித்துள்ளார்.

What do you think?

மத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்!

திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்