பழனி அருகே வடபருத்தியூரில் குடும்ப பிரச்னையில் தற்காப்புக்காக கணவரை கொலை செய்த மனைவி கருப்பாத்தாளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வட பருத்தியூர். இங்குள்ள தோட்டத்து சாலையில் நாட்டுத்துறை (70) என்பவரும், அவரது மனைவி கருப்பாத்தாள் (65) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து தொழில் நடத்தி நிலையில், கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கணவர் நாட்டுத்துறை அரிவாளை எடுத்து, மனைவி கருப்பாத்தாளை வெட்ட முயன்றுள்ளார். அப்போது கணவனிடமிருந்த அரிவாளை பிடுங்கிய மனைவி கருப்பாத்தாள், தற்காப்பு கருதி கணவர் நாட்டு துறையை வெட்டியதாக தெரிகிறது. இதில் நாட்டுத்துறை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கீரனூர் போலீசார் கொலை செய்த கருப்பாத்தளை கைது செய்தனர். தொடர்ந்து உயிரிழந்த நாட்டாத்துறையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வரும் கணவன்-மனைவி இருவருக்குமிடையே தினந்தோறும் சண்டை வந்த நிலையில், நேற்று தகராறு முற்றி கொலையில் முடிந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.