பாஜகவுக்கு ஓட்டு கிடையாதா..? எதிர்கும் அந்த ஊர் மக்கள்..!! பயத்தில் அண்ணாமலை..!!
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளும் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரியில் 24 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது . பாஜகவிற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
நாகப்பட்டினம் வேட்பாளர்கள் :
நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை.செல்வராஜ் வேட்பாளரும், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம் ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
பாஜக வேட்பாளர் புறக்கணிப்பு :
இந்நிலையில், பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இந்து மக்கள் கட்சியினருக்கு, பாஜக வேட்பாளர் அழைப்பு விடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
அதேபோல, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போதும் இந்து மக்கள் கட்சி கொடியை பாஜக வேட்பாளர் ரமேஷ் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக தேர்தல் நோட்டீஸ், பேனர்களிலும், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் புகைப்படம் மற்றும் கொடியை புறக்கணிதுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இந்து மக்கள் கட்சியினருக்கு, பாஜக வேட்பாளர் அழைப்பு விடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
அதேபோல, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போதும் இந்து மக்கள் கட்சி கொடியை பாஜக வேட்பாளர் ரமேஷ் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக தேர்தல் நோட்டீஸ், பேனர்களிலும், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் புகைப்படம் மற்றும் கொடியை புறக்கணிதுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆதரவு கிடையாது :
இதனால், நாகை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நாகையில் பாஜக வேட்பாளர் ரமேஷ், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் புகைப்படம் மற்றும் கொடியை புறக்கணித்ததால் அவருக்கு ஆதரவு கொடுக்க முடியாது என இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜி.முருகையன் படுகொலை :
நாகப்பட்டினம் தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம். ரமேஷ் களமிறங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியை சேர்ந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி எஸ்.ஜி. முருகையனின் மகன். எஸ்.ஜி.முருகையன் மன்னார்குடி பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் முக்கிய தலைவராக இருந்தார். எம்.பியாக இருந்தபோதே படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் தற்போது வரை அந்த கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
இந்நிலையில் திருவாரூர் எம்.ஜி.ஆர் இளைஞர் பேரவை துணைத் தலைவராக இருந்த ரமேஷ், சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். இவரது மைத்துனர் தற்போது நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியாக இருந்த செல்வராஜ். எஸ்.ஜி.எம் ரமேஷின் மாமனார் ஏ.கே.எஸ்.விஜயன். இப்படி இவர்களது குடும்பமே பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பாமாக அங்கம் வகித்து வருகின்றனர்.
மக்களின் எதிர்ப்பு :
இப்படி அரசியல் செல்வாக்கை பெற்றுள்ள ரமேஷ், கடந்த 2022ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், அண்ணாமலையின் ஆதரவோடு நாகை வேட்பாளராக களமிறங்கினார். ஆனால், அவர் இந்து மக்கள் கட்சியை புறக்கணித்து வருவதால், அக்கட்சியினர் கடுப்பாகி ஆதரவு கிடையாது என தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சியினர் மட்டுமின்றி நாகை மக்களும் பாஜகவிற்கு எதிராக செயல்படுவது அண்ணாமலை பாஜகவிற்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..