இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் மாற்று இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேச சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அதில், முதல் டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய அணி இரண்டாம் டெஸ்ட் போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
ஒரு நாள் தொடரில் வங்கதேசத்திடம் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ரோஹித் சர்மா காயம் காரணமாக தொடரிலிருந்து விலக கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியை வென்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தாக்காவில் தொடங்கியது. முதலில் தாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மாமினுள் 84 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். மேலும் இந்திய பந்து வீச்சில், அஸ்வின், உமேஷ் தலா 4 விக்கெட்களும் புதிதாக அணிக்குள் திரும்பிய உனட்கட் 2 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினார்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 228 ரன்கள் பின்னிலையில் இந்திய அணி பேட்டிங் தொடங்கியது. இந்த போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், எப்படியாவது தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெங்கதேசமும் இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு வரம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா அணி வரும் போட்டிகளில் வென்றாக வேண்டியது அவசியமாக உள்ளது.