விளாம் பழத்தினால் நினைவாற்றல் அதிகரிக்குமா..?
• விளாம்பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், இதில் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம்.
• விளாம்பழம் சாப்பிடுவதால் நிறைய நோய்கள் குணமாகும்.விளாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து,சுண்ணாம்புச்சத்து,இரும்புச்சத்து உள்ளது.இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து அன்றாடம் உண்டால் பித்த கோளாறுகள் தீரும்.
• விளாம்பழத்துடன் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் பிசைந்து சிறுவர்களுக்கு கொடுத்தல் நினைவாற்றல் கூடும்.
• விளாம்பழம் சாப்பிடுவதினால் வாய்க் கசப்பு,கண்பார்வை மங்கதல்,தலைவலி,மஞ்சளாக வாந்தி எடுப்பது,கை மற்றும் கால்களில் அதிக வேர்வை,இளநரை,பித்தத்தால் ஏற்ப்படும் கிறுகிறுப்பு,நாக்கு ருசி அற்றத்தன்மை குணமாகும்.
• விளாம்பழத்தில் கால்சியம்,சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ நிறையக் காணப்படுவதால் எலும்புகள்,பற்களுக்கு பலம்.
• பெண்களுக்கு வரும் இரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளுக்கு விளாம்பழத்தின் பிசினை சாப்பிடுவதால் குணமாகும்.
• நரம்புத் தளர்ச்சியை விளாம்பழம் சரிசெய்யும்.
• இரத்தத்தை சுத்திகரிப்பதுடன் தசை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
• விளாம்பழத்தின் இலையை நீரில் கொதிக்கவைத்து பருகினால் வாயுப் பிரச்சனை சரியாகும்.
• விளாம்பழத்தை உண்பதினால் வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாகும்.
• அரைத்த விளாம்பழத்தை மோரில் இட்டு பருகினால் எப்பேற்ப்பட்ட பேதியும் சரியாகும்.
• விளாம்பழம் இலைச்சாற்றை தோல் வறட்சி,பித்த வெடிப்புகளில் தடவினால் குணமாகும்.
• அதிக வியர்குரு மேல் விளாம்பழ இலைச்சாற்றை தடவினால் வியர்க்குரு மறையும்.
• நெஞ்செரிச்சல்,கபம்,வறட்டு இருமல்.பித்தசுரம் குணமாக விளாமர பிசினை உலர்த்தி அன்றாடம் தேனில் கலந்து சாப்பிடனும்.
• விளாம்பழ இலைச்சாற்றை பாலில் கலந்து பருகுவதினால் அஜீரணக்கோளாறு,விக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு குணமாகும்.
• மகளிருக்கு வரும் மார்பக,கருப்பை புற்று நோய் வராமல் தடுக்கும்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..