சருமத்தில் தழும்புகள் மறையனுமா ? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!!
சருமத்தில் பருக்கள் வந்தாலே நம்மை எரிச்சலடையச் செய்யும். அதுகூட சில நாட்கள், அல்லது ஒரு வாரத்தில் கூட பருக்கள் மறையும். ஆனால் பருக்கள் வந்த தழும்புகள் மட்டும் மறையாமல் முகத்தின் அழகையே கெடுத்துவிடும்.
ஆனால் அந்த பருக்கள் வந்த தழும்புகள் மறைய நம் வீட்டு சமையலறையிலேயே சில தீர்வுகள் இருக்கின்றன. அவை என்னனு பார்க்கலாம்.
இந்த வீட்டு வைத்தியத்த டிரை பண்ணுங்க…
சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான சீபம் சுரப்பின் காரணமாக முகத்தில் பருக்கள் உண்டாகின்றன. இந்த பருக்கள் வந்தாலும் அதன் தழும்புகள் மறையாமல் அப்படியே இருக்கும்.
அது சில சமயங்களில் கருமையாகவும் மாறிவிடும். இன்ஃபிளமேஷன்களால் வரும் பருக்கள் சருமத்தில் ஹைபர் பிக்மண்டேஷனாக மாறிவிடும். மெலனின் உற்பத்தியிலும் மாற்றங்கள் உண்டாகும்.
1. பரு வந்த தழும்பு போக்க உதவும் கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லிற்கு ஹீலிங் பண்புகள் அதிகம். அவை சருமத்தில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைப்பதோடு பருக்கள் வந்த இடத்திலுள்ள தழும்புகளை மங்கச் செய்யும்.
பருக்கள் வந்த இடத்தின் மேல் கற்றாழை ஜெல்லை அப்ளை செய்து அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளலாம். இதை தினமும் செய்து வர வேகமாக பரு வந்த தழும்புகள் மறையும்.
2. பரு வந்த தழும்பு போக்க உதவும் லெமன் ஜூஸ்
எலுமிச்சை சாறுக்கு இயற்கையாகவே ப்ளீச்சிங் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. அதனால் அடர் நிறத்தில் இருக்கும் பரு தழும்புகளை மங்கச் செய்யும்.
அரை எலுமிச்சை பழத்தை எடுத்து சாறு பிழிந்து, அதோடு அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு காட்டனில் நனைத்து பரு வந்த இடத்தில் அப்ளை செய்து 10 – 15 நிமிடங்கள் அப்படியே விட்டு பின் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளலாம்.
எலுமிச்சை சாறை அப்படியே அப்ளை செய்தால் சிலருக்கு சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம்.
3. பரு வந்த தழும்பு போக்க உதவும் தேன்
சருமத்துக்கு இயற்கையான மாய்ஸ்ச்சரைஸிங் பண்புகள் உண்டு. .இந்த தேனை சருமத்தில் அப்ளை செய்வதால் பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை மறைய உதவி செய்யும்.
பருக்கள் வந்த தழும்பு உள்ள இடத்தில் தேனை எடுத்து அப்ளை செய்து, வர பருக்கள் வந்த தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
-நிரோஷா மணிகண்டன்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..