உலகில் இப்படியும் ஏமாற்றுவார்களா..? ஊரும் உறவும்-19
இன்று காலை என் தோழியின் திருமணத்திற்க்கு கோயம்பேடு சென்றேன்.., கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து “சேமாத்தம்மன் கோவிலுக்கு” எப்படி செல்வது என்று தெரியவில்லை மற்ற நண்பர்களுக்கு போன் செய்து கேட்ட பொழுது ” கோயம்பேடு மெட்ரோ வந்துவிட்டால் கோவிலுக்கு நடந்தே வந்து விடலாம் என்று சொன்னார்கள்.
நான் மெட்ரோவில் செல்லாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி, சேமாத்தம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டேன் அதற்கு அவர் 180 ரூபாய் ஆகும் என சொன்னார்.
நான் சொன்னேன் இங்கு இருந்து பக்கம் என்று தானே சொன்னார்கள், நீங்கள் என்ன 180 ரூபாய் கேட்கிறீர்கள் என கேட்டதற்கு, பக்கம் எல்லாம் இல்ல மா, அது நெற்குன்றம் என சொன்னார்.
நானும் அவரின் பேச்சை கேட்டு.., ஆட்டோவில் ஏறினேன், இங்கு இருந்து கோவில் எவ்வளவு நேரம் என்று கேட்டதற்கு 20 நிமிடம் என்று சொன்னார்.
ஆனால் நான் ஆட்டோவில் ஏறி 3 நிமிடத்தில் கோவில் வந்து விட்டது.., பக்கத்தில் சற்று எட்டி பார்த்தால் கோயம்பேடு பேருந்து நிலையம் தெரிகிறது. எதற்காக அவர் ஏமாற்றி 180 ரூபாய் வாங்கினார் என்று தெரியவில்லை.
ஒருவர் சென்னைக்கு புதியவர் என்றால்.., தெரியாத முகவரி கேட்டால் இப்படி எல்லாம் சொல்லி ஏமாற்றி விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் தான் மனிதாபி மானத்துடன் நடந்து கொள்கிறார்கள்.
“பணம் சம்பாதிப்பது முக்கியம் தான், ஆனால் இப்படி சம்பாதிப்பது தவறு”.. உங்கள் வீட்டில் யாராவது ஒருவர் இப்படி ஏமார்ந்தாள் உங்களுக்கு எப்படி இருக்கும். அதே போல தான் மற்றவர்களுக்கும் என்று கருத்தில் கொள்ளுங்கள்.
மேலும் இதுபோன்ற பல நிஜ நிகழ்வுகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.