ஒரு தேர்தலில் கூட ஜெயிக்காத அண்ணாமலை கர்நாடகாவின் தலைமை தேர்தல் துணை பொறுப்பாளரா? என அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தவருமான ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிருப்தி காரணமாக பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்களைப் போல் 6 தேர்தல்களை சந்தித்த மூத்த தலைவர்களை மதிக்காமல், பாஜக ஒரு தேர்தலை கூட வென்றிராதவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாக கடுமையாக விமர்சித்தார்.
மேலும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு பாஜக தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது என்பதில் இருந்தே, அவரை கர்நாடகாவில் நியமித்துள்ளது எந்த மாதிரியான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பது தெரியவந்துள்ளதாக விமர்சித்தார்.
முன்னாள் முதல்வர்களான சதானந்த கவுடாவிடம், என்னிடம் வேலை பார்த்த அண்ணாமலையிடம் நாங்கள் வேலை பார்க்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிய ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக தலைமை ஏன் தங்களை இவ்வாறு அவமதித்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.