கோயில் திருவிழாவில் தீ மிதிக்கும் போது, ஒரு பெண் குழந்தையுடன் தீக்குழியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
மன்னார்குடி சத்ய மூர்த்தி மேட்டு தெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோயிலில் கடந்த 18-ஆம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி உள்ளிட்டவற்றை சுமந்து சென்றனர்.
இந்நிலையில், கோயில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில், உமா என்ற பெண் தனது 5 வயது பேத்தியுடன், பால்குடத்தை சுமந்து கொண்டு இறங்கினார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறியதில் இருவரும் தீக்குழியில் விழுந்தனர். இதைத் தொடர்ந்து, சுற்றி இருந்த பக்தர்கள், அவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டதில் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.