‘இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?’ அமைச்சர்களிடம் வாக்குவாதம் செய்த பெண்!

விருதுநகரில் என்.ஆர்.சி.க்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்? என்று அமைச்சர்களிடம் பெண் ஒருவர் வாக்குவாதம் செய்தார்.

விருதுநகரில் கூட்டுறவு துறை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய தொடக்க விழாவில் கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அந்த விற்பனை நிலையங்களை திறந்து வைத்தனர்.

பின்பு இந்த விழா மேடையில் கூட்டுறவு துறை சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது கூட்டுறவு வங்கி கடனாக ரூ.8 லட்சம் கொடுக்கப்பட்டது. அதனை வாங்குவதற்காக மேடைக்கு வந்த கூட்டுறவு சங்கத் தலைவி பாத்திமா அமைச்சர்களை நோக்கி “என்.ஆர்.சி.க்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள்? இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? இந்த நிகழ்ச்சியில் என்.ஆர்.சி பற்றி ஏன் பேசவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர்கள் இருவரும் அவரை அமைதியாக இருக்குமாறும் இஸ்லாமியர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் விளக்கமளித்தனர். இருப்பினும் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

What do you think?

‘மக்களை அடைக்கக்கூடாது’ மாஸ்டர் விழாவில் CAA, NRC, NPR குறித்து பேசிய விஜய்!

‘10,12-ஆம் வகுப்புகளில் தமிழில் படித்தால் தான் அரசு பணியில் முன்னுரிமை’ மசோதா இன்று தாக்கல்!