துவரம்பருப்பு செய்யும் அதிசயம்..!!
கரும்புள்ளி, தேமல் சரி ஆக:
துவரப்பருப்பு ஆனது உடல் ஆரோக்கியம் மற்றும் சமையலுக்கு மட்டுமில்லாமல் தோல், தலைமுடி, பாதம் ஆகிய இடத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் குணப்படுத்தக் கூடியது.
1. துவரப்பருப்பு 200 கிராம்
2. பச்சை மஞ்சள் சிறிய துண்டு
ஆகிய இரண்டையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். இதனை முகத்தில் கரும்புள்ளி மற்றும் தேமல் காணப்படும் இடத்தில் தடவி ஒரு 15 நிமிடம் தடவி காயவிட்டு முகத்தை கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்து வர தேமல் மற்றும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
தேவையில்லாத முடி நீங்க:
பெண்களின் முக அழகை கெடுக்கக்கூடியது உதட்டின் மேல் இருக்கும் முடி. இந்த முடியை எடுக்க பெண்கள் படாதபாடு படுகிறார்கள்.
பெண்கள் உதட்டின் மேல் உள்ள முடியை எடுக்க பார்லர் சென்று வருகிறார்கள், இதனால் முடி அடிக்கடி வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
1. துவரம்பருப்பு -1/4 கிலோ
2. கோரைக்கிழங்கு – 100
3. கல்கண்டு – 50 கிராம்
ஆகியவற்றை நன்றாக பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை உதட்டின் மேல் உள்ள முடியின் மீது தடவி 10 நிமிடம் வைத்திருந்து பின் கழுவ வேண்டும்.
இப்படி வாரம் ஒரு முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்துவர முடி கொட்டிவிடும். மறுபடியும் முடி வளருவதும் குறையும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.