கணவரின் பாதுகாப்பிற்காக மதுக்கடை திறக்க வேண்டி மனு அளித்த பெண்கள்..!!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஜக்கம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் பென்னாகரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இதில் ஜக்கம் பட்டி மற்றும் சுற்றியுள்ள 20 க்கும் மேற்ட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் அரசு மதுபான கிடையாது அதனால் இந்த ஊர் மட்டுமல்லாது அருகில் உள்ள குக்கிரமங்களில் உள்ள மதுப்பிரியர்கள் மது அருந்த பென்னாகரம் நோக்கியே செல்ல வேண்டியிருப்பதால் பல்வேறு இடர்பாடுகள் சந்திப்பதாகவும். இரவு நேரங்களில் வாகனங்களில் மதுக்கடைகளுக்கு செல்லும் பொழுது விபத்துக்கள் நேர்வதாகவும் தெரிவிக்கின்றனர்..
அதனால் ஜக்கம்பட்டி கிராம பெண்கள் தங்கள் ஊரில் மதுபான கடை இருந்தால் கணவர்கள் பாதுகாப்பாக உள்ளூரிலேயே மது அருந்திவிட்டு இருப்பார்கள்.. என கூறி குடும்பத்துடன் வந்து மதுபான கடையை தங்கள் ஊரில் திறக்ககோரி ஆட்சியரிடம் நூறுக்கும் மேற்பட்ட ஜக்கம்பட்டி கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்..
கணவர்களுக்காக பெண்களே வந்து மதுக்கடை கேட்டு விண்ணப்பம் அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..