சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கிய குடியரசுத் தலைவர்

உலக மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்களுக்கு, டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவித்தார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கொல்கத்தாவைச் சேர்ந்த பாகீரதி அம்மா, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த 98 வயது மூதாட்டி கார்த்தியாயினி உள்பட 15 பேருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

105 வயதான பாகீரதி அம்மா கடந்த ஆண்டு கொல்லத்தில் மாநில எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் நடைபெற்ற தேர்வில், கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். கார்த்தியாயினி அம்மா எழுத்தறிவுத் தேர்வில் 98 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார். தன்னுடைய இளமைக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத கார்த்தியாயினி பாட்டி, வீட்டு வேலை செய்து தன் பிழைப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

What do you think?

நடு ரோட்டில் தீப்பிடித்த கார் – குடும்பத்தினர் உயிர் தப்பிய அதிசயம்

‘சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் தங்கிருந்த ஹோட்டல் இடிந்தது’ 4 பேர் பலி!