‘மழையால் அடித்த Luck’ டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி!

Indian players celebrate their win against Bangladesh during ICC Women's Twenty20 2016 Cricket World Cup match in Bangalore, India, Tuesday, March 15, 2016. India won the match by 72 runs. (AP Photo/Aijaz Rahi)

மழையால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி கைவிடப்பட்டதால் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதிபெற்றன.

இதில் முதல் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக டாஸ் கூட போடாமல் போட்டி கைவிடப்பட்டது. மாற்று நாட்கள் இல்லாததால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து புதிய வரலாறு படைத்துள்ளது இந்திய மகளிர் அணி.

What do you think?

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்காக மட்டும் இத்தனை கோடி செலவா?

ரஜினி நடிக்கும் “அண்ணாத்த” படத்தின் வில்லன் இவரா?