மாதவிடாயும் பெண்களும்
மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலி மிகவும் கொடுமையானது.., அந்த சமயத்தில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று.
ஆனால் ஓய்வு எடுக்காமல் பல பெண்கள் உழைத்துக் கொண்டு இருகின்றார்கள். அப்படி ஓய்வு எடுக்காமல் இந்த சமயத்தில் உழைத்தால் அதனால் ஏற்படும் விளைவும், அதை சமாளிக்க தேவையான சில குறிப்புகள் பற்றியும் பார்க்கலாம்.
மாதவிடாய் சமயத்தில் நூற்றில் 95% பெண்களுக்கு, வயிற்று வலியும், மாதவிடாயும் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் நாம் அதிக வேலைகள் செய்யும் பொழுது.
அதாவது, எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும் பொழுது உடல் சோர்வு ஏற்பட கூடும். நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை pad மாற்ற வேண்டும், என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.
ஆனால் நீண்ட நேரம் வேலை செய்யும் பொழுது அதை செய்ய மறந்துவிடுகிறோம். வயிற்று வலியை சரி செய்ய காலை நீட்டிய படி அமர வேண்டும். இதனால் யுட்ரஸ் பாதிக்கப்படாது.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது, தேவையான உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.
வெளி பயணம் செல்வதை தவிர்க்கலாம், முடியாத பட்சத்தில் நான்கு மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்ய வேண்டி இருந்தால், காலை நீட்டிய படி படுத்து உறங்க செய்யலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படிதிடுங்கள்.
– வெ.லோகேஸ்வரி.