பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ’விழித்திரு திட்டம்’

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக முதல் முறையாக   விழித்திரு திட்டம் தொடங்கப்பட்டது.

நல்ல முறையில் தொடுதல் மற்றும் தவறான முறையில் தொடுதல் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகை நகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக விழித்திரு என்ற பாதுகாப்பு அமைப்பை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தொடங்கி வைத்தார்.

தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் குறித்து எழுதி புகார் பெட்டியில் போட குழந்தைகள் தைரியமாக முன் வரவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் கேட்டுக்கொண்டார்.   இதனிடயே அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் பொருத்தும் பணிகளும் இன்று தொடங்கப்பட்டது.

What do you think?

குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிறுத்தியது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி

‘வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்’ ஆச்சிரியத்தில் பொதுமக்கள்