February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் இந்தியா தமிழ்நாடு

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரலில் தொடக்கம்

என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி தொடங்க உள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் நபராக தன்னை பற்றிய விவரங்களை அளிக்க உள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராம்நாத் கோவிந்த் என்.பி.ஆர். தயாரிப்பு பணியை தொடக்கி வைக்க உள்ளதாக மத்திய அரசும் தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் மக்கள் தங்களின் பெயரை சேர்க்க ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண் (பான்) உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட 21 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை குடும்ப தலைவர் காட்ட வேண்டியது இருக்கும்.

அசாம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இதற்கான தகவல்கள் வீடு வீடாக சென்று திரட்டப்படும். 1955-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் 2003 குடியுரிமை விதிகள் அடிப்படையில் என்.பி.ஆரில் ஒவ்வொரு குடிமகனும் பதிவு செய்வது கட்டாயமாகும். என்.ஆர்.சி.க்கான முதல் படிதான் தேசிய மக்கள் தொகை பதிவோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. என்.பி.ஆர் மற்றும் சென்சஸ் தகவல்களிலேயே என்.ஆர்.சிக்கு தேவையான அனைத்து தகவலும் பெறப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.

Related posts

மார்ச் 5ந் தேதி விண்ணில் பாயும் GSLV – F10 ராக்கெட்!

superadmin

அதிநவீன கேமராவுடன் மருத்துவமனையில் நுழைந்த நபர் – நர்சுகள் அலறியடித்து ஓட்டம்..!

Digital Team

அடிச்சுட்டாய்ங்கடா எம்ஜிஆருக்கும் காவிச்சாயம்!!!

Digital Team

‘கோவிட்-19’ என பெயர் மாறிய கொரோனாவால்; சீன அதிபருக்கே இந்த நிலைமையா?

Digital Team

“கொரோனா வைரஸ் உயிரிழப்பு 902 ஆக அதிகரிப்பு; 5000-ஆக அதிகரிக்கலாம் என்றும் கணிப்பு”!!!

Digital Team

2018-ம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் கைது!

superadmin
You cannot copy content of this page
Madhimugam