‘பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற உலகின் முதல் கிரிக்கெட் போட்டி’

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற முதல் கிரிக்கெட் போட்டி என்ற பெயரை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதன் கோரா முகத்தை காட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் ஒரே இடத்தில் கூட வேண்டாம் என்று பல நாட்டு அரசாங்களும் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்தவகையில் இன்று சிட்னியில் உள்ள மைதானத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ரசிகர்கள் யாரும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் இல்லாததால் மைதானத்தின் கேலரிகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற உலகின் முதல் கிரிக்கெட் போட்டி என்ற பெயரை இது பெற்றுள்ளது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக வார்னர் 67 ரன்களும், கேப்டன் பின்ச் 60 ரன்களும் எடுத்தனர்.

What do you think?

CAA தொடர்பாக இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் தமிழக அரசு நாளை ஆலோசனை

‘ரஜினியை முந்திய விஜய்’ மகிழ்ச்சியில் ரசிகர்கள்