ஆஞ்சநேயர் வழிபாடு – கிடைக்கும் பலன்..!!
செவ்வாய்கிழமை முருகருக்கு உகுந்த நாள் மட்டுமல்ல, ஆஞ்சநேயருக்கும் உகுந்த நாள் இந்த நாளில் முறையான வழிபாடு செய்தால். கிடைக்கும் பலன்கள் பற்றியும், எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றியும் பார்க்கலாம்.
* செவ்வாய்கிழமை அன்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வெண்ணைய் சாற்றி வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
* தெரிந்தும் தெரியாமலும் நாம் பல பாவங்களை செய்கின்றோம், அப்படி நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பாவங்கள் நீங்க, வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபட்டால் செய்த பாவங்கள் நீங்குமாம்.
* ஆஞ்சநேருக்கு பிடித்த வடமாலையை சாற்றி வழிபட்டால் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
* பெண்கள் வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும்.
* அதுமட்டுமின்றி சில குழந்தைகளை கெட்ட சக்திகள் தீண்டினால், குழந்தைகள் அழுது கொண்டே இருப்பார்கள், எனவே செவ்வாய்கிழமை அன்று மாலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு அழைத்து சென்று முடிக்கயிறு போட்டு வணங்கினால்.
* தீயசக்திகள் விலகி விடும்.., குழந்தைகள் மட்டுமல்ல இந்த பிரச்சனை உள்ள பெண்கள் கூட செல்லலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..