தோஷங்கள் போக்கும் சிவன் வழிபாடு..!! ஐப்பசியில் சிவனுக்கு இதை செய்ய மறக்காதீங்க..!!
இன்று ஐப்பசி இரண்டாம் நாள்., இன்று அனைத்து சிவன் கோவில்களிலும் உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பூஜை நடைபெறும்.
இந்த நாளில் சிவபெருமான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் அன்னதோஷமும்.., அன்ன துவேஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.
அன்னதோஷம் என்றால் என்ன..? அன்னதோஷம் எப்படி பிடிக்கும்..?
பசியால் வாடும் உயிர்களுக்கு உணவு அளிக்காமல் இருப்பவரையும்.., பிற உயிர்களை சாப்பிட விடாமல் செய்வது, ஐந்து அறிவு ஜீவன்கள் சாப்பிடும் பொழுது விரட்டுவது.., அந்த வகை உயிரினங்களுக்கு எந்த உணவும் அளிக்காமல் துன்புறுத்துவது இது போன்ற செயல்களை செய்வது..
பந்தியில் உட்கார்ந்தவர்களை பாதியில் எழுப்புவது, உணவுகளை பிறருக்கு கொடுக்காமல் குப்பையில் வீசுவது, போன்ற பாவ செயல்களை செய்தால் அன்னதோஷம் ஏற்படும்.
அன்னதோஷம் பிடித்து விட்டால் எவ்வளவு தான் உழைத்து வீட்டில் செல்வம் சேர்த்தாலும் வீட்டில் செல்வம் செழிக்காது.
வீட்டில் தரித்திரம் புகுந்து விட்டால்.., ஒரு வாய் உணவு கூட வாயில் வைக்க முடியாது.
இந்த தோஷம் நீங்க வேண்டுமென்றால் அன்னபூரணி விரதம் இருந்து அன்னதானம் செய்ய வேண்டும்.
முக்கியமாக ஐப்பசி பெளர்ணமி தினத்தில் அன்னதால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானை தரிசனம் செய்வது இன்னும் சிறந்த பலன்களை கொடுக்கும்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..