மஞ்சள் பூசணியின் நன்மைகள்…!
மஞ்சள் பூசணியில் அதிக அளவிலான இரும்புச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தினை மேம்படுத்தி மலச்சிக்கலை சரிச்செய்கிறது.
மஞ்சள் பூசணி நரம்புகள் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது.
உடலில் இருக்கும் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
பூசணியின் விதைகளை காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து பருகி வர இதயத்திற்கு நல்ல பலமாக அமைகிறது.
இதில் அதிக அளவிலான வைட்டமின் சி மற்றும் இதர கனிம வளங்கள் இருப்பதால் அன்றாடம் மஞ்சள் பூசணியின் ஜூஸை குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவில் இருந்து உடலை பாதுகாக்க இது உதவுகிறது.
மஞ்சல் பூசணியில் கலோரிகள் குறைவு, ஆனால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.
இரவில் நல்ல நீண்ட தூக்கம் தூங்க இது உதவியாக இருக்கும்.
எதிர்காலத்தில் பார்வை திறனை காக்க அன்றாடம் மஞ்சள் பூசணியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பூசணியின் விதைகள் மற்றும் தோல் ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வர பேன் தொல்லை நீங்கும்.