Yes Bank முறைகேடு – சிபிஐ வழக்குப் பதிவு

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ் வங்கி முன்னாள் தலைவர் ராணா கபூரின் மனைவி, மகள்கள் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.

திவான் ஹவுசிங் நிறுவனத்திற்கு எஸ் வங்கி 4,500 கோடி ரூபாய் கடன் அளித்திருந்தது. அது வாராக் கடனாக மாறிய நிலையில், இந்த கடனுக்காக ராணா கபூரின் மகள்கள் நடத்தும் போலி நிறுவனத்திற்கு திவான் ஹவுசிங் 600 கோடி ரூபாய் அளித்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்ட ராணா கபூர் மீது சி.பி.ஐ.யும் நேற்று வழக்கு பதிவு செய்தது. இதனிடையே லண்டனுக்கு தப்ப முயன்ற அவரது மகள் ரோஷ்னி கபூர், நேற்று மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்நிலையில் ரோஷ்னி கபூர் உள்ளிட்ட ராணா கபூரின் குடும்ப உறுப்பினர்கள் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

What do you think?

கர்நாடகாவில் களமிறங்கிய கொரோனா; 4 பேருக்கு நோய் தொற்று உறுதி

‘மாஸ்டர்’ 2-வது சிங்கிள் டிராக் – அனிருத்தின் மசாலா குத்து