‘600 கோடி லஞ்சம்’ Yes Bank நிறுவனர் ராணா கபூர் கைது!

Yes Bank நிறுவனர் ராணா கபூர் 600 கோடி லஞ்சம் பெற்றதாக மும்பையில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Yes Bank வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கியது இதனால் மத்திய ரிசர்வ் வங்கி Yes Bank நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் Yes Bank நிறுவனர் ராணா கபூர் மற்றும் அவரது மகள்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை மும்பையில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், டி.ஹெச்.எஃப்.எல் நிதி நிறுவனத்தின் 4,450 கோடி ரூபாய் வாராக்கடனுக்கு நடவடிக்கை எடுக்காமலிருக்க 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. மேலும் கடும் நிதி சிக்கலில் இருந்த சில நிறுவனங்களுக்கு தெரிந்தே அதிகளவில் கடன் கொடுத்து ஆதாயம் அடைந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து அமலாக்கத்துறையினர் ராணா கபூரை கைது செய்தனர். ‌லஞ்சம் பெறுவதற்காக தனது மகள்கள் பெயரில் போலியான நிறுவனம் ஒன்றை ராணா கபூர் நடத்திவருவதாக எழுந்த புகார் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

இன்று மகளிர் தினத்தில் உலககோப்பையை வெல்லுமா இந்திய மகளிர் அணி!

‘பொது இடத்தில் நடிகையிடம் இப்படியா நடந்து கொள்வது?’ வைரலாகும் சல்மான் கானின் வீடியோ உள்ளே:-