இலக்கணம் இல்லா கவிதை நீ..! அதை எழுதிடாத ஓர் உவமை நீ..!!
இன்றைக்கு நம்ம சீதா மகாலட்சுமிகு பிறந்தநாள்,சினிமாவில் சிலருக்கு முதல் படமே மாபெரும் வெற்றி அடைந்து விடும் அப்படித்தான் இந்த நடிகையின் வாழ்க்கையில் ஒரு படம் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். என்னதான் இது டப்பிங் படமாக இருந்தாலும் இந்த படத்தை பார்த்து இப்படி ஒரு காதல் கதையாக இருக்க முடியுமா என்று தான் யோசிக்க தோணுகிறது.
அந்த அளவிற்கு மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது இந்த படம். இந்த படத்தில் ராமாக “துல்கர் சல்மான்” நடித்திருப்பார் , அவரை தவிர வேற யாராலும் இந்த கதாபாத்திரத்தை உயிர் பிறப்பித்து நடித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது, அப்படி ஒரு நடிப்பினை தந்திருப்பார், கதாநாயகி சீதா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் “மிருணால் தாக்கூர்” நடித்து ரசிகர்கள் மத்தியில் சீதா மகாலட்சுமியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்.
பலருக்கும் சீதா மகாலட்சுமியை “இனிய இருமலர்கள் “அம்முவாக தான் தெரியும். ஏன் என்றால் அந்த சீரியல் பார்த்த அனைவர்க்கும் அந்த அம்முவை ரொம்பவே புடிக்கும் அதனால் யாராலும் ஈசியாக மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு இளவரசி தன்னுடைய காதலனுக்கு அரண்மையை விட்டு வந்து விட்டார் என எத்தனையோ கதைகளில் கேட்டிருபோம் அதை நிஜமாக்கிய “இளவரசி நூர்ஜஹான்”.
தன்னுடைய காதலன் இறந்து விட்ட்ன என்பதை ஏத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறான், இன்னும் எத்தனை காலங்கள் கடந்து போனாலும் உன்ன நான் காத்திருப்பேன்.அதனை வலிகளையும் தாங்கி கொண்டு காத்திருக்கிறாள் இந்த பாடலை எழுதியவர் மதன் கார்க்கி, இசையமைத்தவர் விஷால் சந்திரசேகர் பாடகி சிந்தூரி விஷால் பாடிய பாடல் இது.
காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
காதலை ஏந்தி காத்திருப்பேன்
கனவுகளாய் காத்திருப்பேன்
கரைந்திடும் உன் உன்னை காண்பேனே………
உன் அழகை பார்த்து சிற்பங்களுக்கு கூட காதல் வந்து விடும், உயிர் இல்லாமல் இருக்கும் கற்களுக்கு கூட காமம் வந்து விடும், நானோ ஒரு மானுடன் உன்னை காதலித்து என்ன ஆகுவேன். உன் அழகால் என்னை கொள்கிறாய், இசை அமைப்பாளர் “விஷால் சந்திரசேகர்” இசையில் பாடகர் “சாய் விக்னேஷ்” பாடிய பாடல்.
கம்பன் சொல்ல வந்து
ஆனால் கூச்சங்கொண்டு
எழுதா ஓர் உவமை நீ…….
வர்ணம் சேர்க்கும்போது
வர்மன் போதை கொள்ள
முடியா ஓவியமும் நீ……..
இந்த பூமி இதுவரை காணாத ஒரு காதல் கதையை நான் உண்மிது காட்டுவேன்.நாளை நிகழவிருக்கும் நிகழ்வுகளை எழுதுகோளால் இன்றைக்கே எழுத முடியாது நேற்று முடிந்து போன ஒன்றை காலம் எப்படி நினைவு வைத்திருக்கும்.இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையில் பாடகர்கள் எஸ். பி. பி. சரண் மற்றும் சிந்தூரி பாடிய பாடல் இது.
ஹே சீதா
உயிர் நுழைய வாசல் தா
ஹே சீதா
உன்னில் வசிக்க வாய்ப்பை தா…….
உன்னுடைய இதழால் குடுத்த முத்தத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை ஆனால் அதற்குள் என்னை பிரியாதை, இந்த தேசத்திற்காக நீ ஒரு பாதையில் செல்கிறாய் , அவளுடைய நேசம் நீயாக இருக்கிறாய் இதில் என்னத்த பாதையை தேர்ந்தெடுக்க போகிறாய்.
விழியாலே சொன்னாயடா
நான் ரெண்டும் கேட்டேனடா…..
இதழ் முத்தமிட்ட பின்னே
அதன் ஈரம் காயும் முன்னே…….
இலக்கணம் இல்லா கவிதை நீ..! அதை எழுதிடாத ஓர் உவமை நீ..? இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் “மிருணால் தாக்கூர்”
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..