சமையலறை குறிப்புகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- கொத்தமல்லி இலையை கொண்டு சட்னி அரைக்கும்போது, புளி சேர்த்து அரைப்பதற்கு பதிலாக ஒரு துண்டு மாங்காய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கொத்தமல்லி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும்.
- வருத்தப்பூண்டு, வரமிளகாய், பொட்டுக்கடலை, கொப்பரை தேங்காய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து, இதனை சூடான சாதத்தில் சேர்த்து நெய் விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- வாழைப்பழம் நீண்ட நாட்களுக்கு கெட்டுபோகாமல் இருக்க, ஒரு டம்ளரில் கால்பாதி அளவு தண்ணீர் வைத்து அதில் வாழைப்பழ காம்பு பகுதி படும்படி வைக்க வேண்டும். கட்டாயம் தினமும் தண்ணீரை மாற்ற மறக்கக்கூடாது.
- மீன் சுத்தம் செய்யும்போது துர்நாற்றம் வீசாமல் இருக்க, கையில் ஒரு சொட்டு எண்ணெய் தடவிக் கொண்டு மீனை சுத்தம் செய்யலாம்.
- வீட்டில் அவியல் செய்யும்போது அதில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், ஊறவைத்த கசகசாவை சேர்த்து அவியல் செய்தால் ருசியாகவும் அவியல் கெட்டியாகவும் இருக்கும்.
- கொழுக்கட்டை விரிசல் விழாமல் செய்ய, அரிசி ஊறவைக்கும்போது ஒரு கைப்பிடி உளுந்து சேர்த்து ஊறவைத்து, பின் அதனை ஆட்டி, இந்த மாவில் கொழுக்கட்டை செய்தால் விரிசல் விழாது.
- சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கில் அரிப்பு தன்மை நீங்க, அரிசி கழுவிய இரண்டாவது நீரில் இதனை வேகவைக்கலாம்.
- உளுந்தை நல்லெண்ணெயில் நன்றாக வறுத்து அதில் மிளகு மற்றும் தேங்காய் சேர்த்து சட்னி அரைக்க சட்னி சுவையாக இருக்கும்.
- சமையலறையில் பூச்சுகள் அண்டாமல் இருக்க, அலமாரியில் காய்ந்த வேப்ப இலை தூவி அதன் மேல் பேப்பரை போட்டு மளிகை பொருட்களை அடுக்கி வைக்கலாம்.
- பிரட் துண்டு காய்ந்து போய்விட்டால், இட்லி பாத்திரத்தில் பிரட் துண்டுகளை வைத்து ஆவியில் வேகவைத்து எடுங்க.பிரட் துண்டு பஞ்சுபோல ஆகிவிடும்.