புரோட்டீன் நிறைந்த துண்டாக்கப்பட்ட மீன் சூப்…
காலநிலைக்கு ஏற்ப நோய்த்தொற்றுக்கள் நம்மை தாக்கிக்கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
அப்படி புரோட்டீன் அதிகம் காணப்படும் மீன் வைத்து ஒரு சூப் செய்யலாம் வாங்க…
தேவையானப் பொருட்கள்:
-
300 கிராம் எலும்பு நீக்கப்பட்ட தோமன் மீன் துண்டுகள் அல்லது உங்களுக்கு விருப்பமான லேசாக வேகவைத்த மீன் வகை
-
80 கிராம் உலரவைக்கப்பட்ட பழுப்பு அரிசியால் செய்யப்பட்ட பீ ஹூன், தண்ணீரில் 20 நிமிடம ஊறவைக்க வேண்டும்
-
2 தக்காளிகள், சரிபாதியாக வெட்டப்பட்டது
-
2 சுருள் வெங்காயங்கள், 2 அங்குல நீளத்தில் வெட்ட வேண்டும்
-
10 கிராம் நறுக்கிய இஞ்சி
-
2 தேக்கரண்டிகள் எண்ணெய்
-
8-10 லாட்டுஸ் இலைகள், கடிக்கும் அளவிற்கு நறுக்கப்பட வேண்டும்
-
1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
-
½ கோப்பை இவாப்பரேட்டட் பால் (Evaporated Milk)
-
2 கோப்பைகள் (500 மில்லிலிட்டர்) சுடுநீர்
-
2 தேக்கரண்டி கோழி அல்லது மீன் ஸ்டாக் சுவையூட்டி
-
மிளகாய் (தேவைப்பட்டால்)
-
சுவைக்கு மிளகு
செய்யும் முறை:
1. எண்ணெய்யை நான்-ஸ்டிக் பேனில் (non-stick pan) சூடாக்கவும். துண்டாக்கப்பட்ட இஞ்சியை 1 நிமிடத்திற்கு அல்லது வாசனை வரும்வரை வறுக்கவும்.
2. 2 கோப்பை தண்ணீரை ஊற்றவும். ஸ்டாக் சுவையூட்டியைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
3. பழுப்பு அரிசி பீ ஹூன், மீன் துண்டுகள், வெட்டிய தக்காளி, லாட்டுஸ் கீரை, சுருள் வெங்காயம், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, 2 நிமிடங்கள் சமைக்கவும்.
4. இவாப்பரேட்டட் பால், மிளகாய் மற்றும் சுவைக்காக மிளகைச் சேர்க்கவும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.