சமஸ்கிருதம் படிச்சாதான் இந்தியாவையே புரிஞ்சிக்க முடியும்..!! எம்.பி கனிமொழி பேச்சு..!!
தூத்துக்குடியில் 5-வது புத்தகத் திருவிழாவை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்… சமஸ்கிருதம் தான் இந்தியா என்ற கருத்தை பரப்பிக் கொண்டிருந்த சமயத்தில் முதல் முதலாக எதிராக எழும்பிய குரல் தூத்துக்குடியில் இருந்து ஒலித்த கால்டுவெல் குரல் தான்.. என பேசினார்..
தூத்துக்குடியில் 5வது புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது., இந்த புத்தக்திருவிழாவானது வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது…
தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விளக்கு பிரிவில் பிரமாண்டமான அரங்கத்தில் உள்ள இந்த புத்தக கண்காட்சியை தூத்துக்குடி எம்பி கனிமொழி, நிதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
அதன்பின், புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ள புத்தகங்களை பார்வையிட்டனர்.. அதனை தொடர்ந்து, சமூகநலன்கள் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், 5வது வருடமாக சிறப்பாக வாசிப்பு பழக்கம் ஏற்பட இந்த வாய்ப்பு உருவாக்க பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட தியாகிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கக்கூடிய வாழ்ந்த இடம் என்றால் அது தூத்துக்குடி மற்றும் ஈரோடு தான்.. நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் பொறுப்பேற்றதில் இருந்து இந்த புத்தகத் திருவிழாவை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. தசரா விடுமுறையை ஒட்டி நல்ல ஒரு நிகழ்வாக நெய்தல்திருவிழா, புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது என்றார்..
அதனை தொடர்ந்து கனிமொழிஎம்பி பேசுகையில், சமஸ்கிருதம் படிச்சாதான் இந்தியாவையே புரிஞ்சிக்க முடியும். சமஸ்கிருதம் தான் இந்தியா என்ற கருத்தை பரப்பிக் கொண்டிருந்த சமயத்திலே முதல் முதலாக அதற்கு எதிராக எழும்பிய குரல் தூத்துக்குடியில் இருந்து ஒலித்த கால்டுவெல் குரல் தான்..
திராவிடத்தின் தனித்தன்மையை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் தூத்துக்குடி மாவட்டம் தான். நமது வாழ்க்கையை புரிந்து கொள்ள புத்தகங்களை படிக்க வேண்டும். ஆராய்ச்சியாக இருந்தாலும், ஆய்வு கட்டுரைகளாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் புத்தகங்கள் படிப்பது தான் சிறந்த வழி.
தூய்மை பாரதத்தைப் பற்றி தற்போது நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிதர்சனத்தில் மனிதர்கள் புரிந்து கொள்ளும் புத்தகங்களை படித்தால் மட்டுமே பிரச்னைகளை சரி செய்ய முடியும்.
இதன் மூலமாகவே எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்த முடியும். இதனால் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் அதிக அளவிலான புத்தகங்களை படித்தார்கள். வாசிப்பின் வழியாக எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் கீழே இருக்கக் கூடிய மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்த முடிந்தது எனவே வாசிப்பை நாம் அனைவரும் மேம்படுத்த வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர்தங்கம், தென்னரசு திராவிடம் என்ற சொல் இன்று நேற்று தோன்றியதல்ல பண்டைய காலத்தில் நம்மாழ்வார் எழுதிய பாடல்களில் திராவிடம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது என ஆதாரத்துடன் பல்வேறு புத்தகசான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் துறைசார்ந்த பணியாளர்கள் கலை நிகழ்ச்சிகள் பள்ளி மாணவ, மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.. இதுதவிர ஒவ்வொரு நாளும் சிறந்த எழுத்தாளர் களின் பேச்சுக்கள், கவியரங்க நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் தலை சிறந்த பாரம்பரிய கலைஞர்கள் அதிகம் பேர் பங்கேற்கும் நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.
மேலும், இந்த புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் திருவிழாவிற்கு மக்கள் எளிதாக சென்று வரும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் தூத்துக்குடி பழைய பஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுகிறது. இதுதவிர மதுரை பஸ்கள் சில 11 நாட்களுக்கு அந்த இடத்தில் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்படடுள்ளது.
முன்னதாக, புத்தகத் திருவிழாவின் பிரம்மாண்ட பலூனை பறக்கவிட்டார். இந்த திறப்பு விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்மேயர் ஜெகன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..