சென்னை கோட்டூர்புரம் முத்துமாரியம்மன் கோயில் அருகில் நீர் வழி தடங்கள் அருகாமையில் வசிப்பவர்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டு கொசுவலைகளை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறினார். மருத்துவ குழுவின் அறிக்கையை வைத்து தான் மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது என தெரிவித்தார்.
அதை தொடர்த்து, திமுக ஆட்சியில் மருத்துவத்துறை சீரழிந்து விட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டினார் அதற்கு பதிலளித்த அமைச்சர், குஜராத் தொங்கு பாலம் விபத்தில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர் அதற்கு பாஜக அரசு தொங்கு பாலம் விபத்து கடவுளின் விதி என்று சொல்லி தப்பிக்க நினைத்தது அதை போல் நாங்கள் கடவுளின் பெயரை சொல்லி தப்பிக்க நினைக்கவில்லை ப்ரியாவின் மரணத்திற்கு கவனக்குறைவுதான் காரணம் என்று அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்றும் ஓரிரு நாட்களில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை கிடைக்கும். உண்மையை உரக்கச்சொல்லி என்ன நடந்தது என்பதை ஊருக்கு தெரிய வைப்போம் என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.