“கஷ்டம் தாண்டி வந்த கூட நீயும் இருந்த.. நல்ல Friend நீ தோல் கொடுத்த..”
நம்ம வாழ்க்கையில் எத்தனை உறவுகள் இருந்தாலும் “நண்பன்” என்ற ஒருத்தன் இருந்த போதும் நம்ம எவளோ கவலையாக இருந்தாலும் அதை எல்லாம் தூக்கி எரிந்து விட்டு, சிரிக்க வைத்து விடுவான், சோகமா இருந்தாலும் சரி, சந்தோசமா இருந்தாலும் சரி உங்களுடன் கண்டிப்பாக பயணித்து இருப்பான் உங்கள் நண்பன்.
நம்ம சின்ன வயசா இருக்கும்பொழுது நம்ம கூட தெருவுல ஒண்ணா விளையாடிட்டு இருந்த நண்பர்கள், அதற்க்கு அப்புறமாக பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது இருக்கின்ற நண்பர்கள், கல்லூரி சென்ற பின் கிடைக்கும் நண்பர்கள், அலுவலகத்தில் கிடைக்கும் நண்பர்கள் நம் எங்கு சென்றாலும் நண்பன் என்ற ஒரு நபர் நம்முடன் பயணித்து கொண்டுதான் இருக்கிறான்.
சில சமயங்களில் அவன் மீது மனக்கசப்பு ஏற்பட்டாலும் சரி திரும்பி அவனிடமே சென்றுவிடுவோம் அதுதான் “நட்பின் மந்திரம்” என்று சொல்லலாம், நண்பர்களே ரொம்பவே லக்கியான ஒரு நண்பன் யாரு என்றால், ஸ்கூல், காலேஜ், என அனைத்திலும் ஒரு நண்பன் உங்களுடன் பயணிக்கிறான் என்றால் அவன் ரொம்பவே லக்கி நபராக இருக்க முடியும்.
என் நண்பனை போல வேற யாரும் இல்லை, உன் நட்பினால் என் நெஞ்சை தைத்து வைத்து விட்டான் இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் இசையில், பாடகர்கள் கிரிஷ், சுஷித் சுரேசன் பாடியது.
என் ஃபிரண்ட போல
யாரு மச்சான் அவன் ட்ரெண்ட
எல்லாம் மாத்தி வச்சான்……
நீ எங்க போன எங்க மச்சான்
என்ன எண்ணி எண்ணி ஏங்க வச்சான்…..
பாசம் வைக்க நேசம் வைக்க எத்தனை உறவுகள் இருந்தாலும் அவங்களை எல்லாம் விட, என் நண்பன் கேட்ட உசுரை கூட தருவேன்.இசையமைப்பாளர் இளையராஜா,பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஜே. யேசுதாஸ் பாடியது.
உள்ளம் மட்டும்
நானே உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா
வாங்கிக்கன்னு சொல்லுவேன் …..
நட்பு இருக்கு மத்தது எல்லாம் எதற்கு இறைவன் தந்த வரம் நமக்கு, நண்பன்னோட காதலுக்கு பிரச்சனைன்னு வந்த கூட நட்ப்புக்காக எல்லாரும் சேர்ந்து சண்டை போடுவோம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, பாடகர் அந்தோணி தாசன், ஹிப் ஹாப் தமிழா சேர்ந்து பாடிய பாடல் இது.
நண்பன் இருக்கான்
உயிரத்தான் கொடுப்பான்
இனிமே உனக்கு பயம் எதுக்கு
போடு போடு போடு …….
எத்தனை நண்பர்கள் வந்தாலும் கல்லூரி காலங்களில் கிடைக்கும் நண்பர்கள் மிகவும் முக்கியமான நண்பராக மாரி விடுகின்றனர். கல்லூரியில் ஜூனியர் ராகிங் கூட நடக்கும், நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை கூட தொடலாம், வானிற்கு கூட எல்லை உண்டு ஆனால் நட்புக்கு எல்லை இல்லை இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்,பாடகர் ஏ. ஆர். ரகுமான் பாடியது.
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வாணுக்கும் எல்லை உண்டு
நட்புக்கில்லையே……
உங்கள் நண்பன் உயிரை கொடுக்குற நண்பனா..? இல்லை உயிரை எடுக்குற நண்பனா..?
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..