“திருமணத்தடை நீங்க., குழந்தை வரம் கிடைக்க., தோஷங்கள் விலக..” இந்த திருத்தலத்திற்கு சென்றால் போதும்..!!
ஒவ்வொரு தெய்வத்திற்கு ஒவ்வொரு சிறப்புகள் உண்டு அப்படியாக., அந்த தெய்வத்தை நாம் முறையாக வழிபட்டால் நாம் கேட்ட வரங்கள் கிடைக்கும்.. அப்படி இன்று நாம் பார்க்க போகும் ஆன்மீக பதிவும் ஒரு சிறந்த திருத்தலத்தை பற்றி தான்..
சேலம் மாவட்டம் மேச்சேரியில் கோவில் கொண்டிருக்கும் அருள்மிகு பத்ரகாளியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வமாக திகழ்கிறார்.. இந்தக் கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி கொடுக்கிறது. இது இக்கோவிலின் சிறப்பாக காட்சி அளிக்கிறது..
மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் இருப்பது இக்கோவிலுக்கு தனி அழகை கொடுக்கிறது..
இக்கோவிலில் அன்னை மேச்சேரி பத்ரகாளியம்மன் அஷ்டபுஜங்களில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரரூபமான சூலாயுதம், கபாலம், உடுக்கை, வாள், கேடயம், தலை, மணிகளை தாங்கிய தண்டையணி பொன்சலங்கை அணிந்து வலதுகால் மேலூன்றி, பொன் சலங்கை அணிந்த இடது காலை அசுரன் மீது ஊன்றி வீராசனத்தில் அமர்ந்து, மூக்கில் மின்னும் மூக்குத்தியும், பவளமாய் ஜொலிக்கும் புன்சிரிப் புடனும், அக்னி மகுடமும், குண்டலமும் அணிந்து தேவியாய், பத்ரகாளியாய் அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்..
வாழ்வில் ஒருமுறையாவது நாம் மேச்சேரி பத்ரகாளியம்மனை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை விலகி பரம்பரையில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
மேலும், பில்லி சூனியம் ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பத்திரகாளி அம்மனை இவை அனைத்தும் விட்டு விலகும் என சொல்லப்படுகிறது..
குறிப்பாக ராகு, கேது தோஷத்தால் ஏற்படும்பிரச்சனைகள் திருமண தடை, குழந்தை வரம் இல்லாதவர்., உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீராத நோயால் அவதிப்படுபவர்., மேச்சேரி பத்ரகாளியம்மனை ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும் என்பது உண்மை..
மேலும் ஏதேனும் இக்கட்டான சூழ்நிலையால் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள் ஒருமண்டலம் இங்கு வந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் அவர்களுக்கு அந்த நோய் குணமாகி விடும் என்பது இக்கோவிலின் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..