“மாட்டு தொழுவத்தில் படுத்து உறங்கினால் புற்றுநோய் வராது..” உ.பி அமைச்சரால் வெடித்த சர்ச்சை…!!
மாட்டு தொழுவத்தில் படுத்து உறங்கு பவர்களுக்கு புற்றுநோய் வராது எனவும் மாடுகளை சுத்தப்படுத்துவதனால் இரத்த அழுத்தம் குறையும் என உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும் பாஜகவின் நிர்வாகியுமான சஞ்சய் சிங் கங்வார் கூறியுள்ளார். அது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது..
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டம் பகாடியா நௌகவான் பகுதியில் பசு காப்பகத்தை அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார் திறந்து வைத்தார்., அதனை தொடர்ந்து பேசிய அவர் மக்கள் அனைவரும் “திருமண நாள், பிறந்தநாள் மற்றும் விஷேச நாட்களை மக்கள் பசு தொழுவத்தில் கொண்டாட வேண்டும்”..
குறிப்பாக ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் தினமும் அவற்றை சுத்தம் செய்து அவற்றை தொட்டு தழுவினால் இரத்த அழுத்தம் குறையும், குறிப்பாக 20 மில்லிகிராம் மருந்து சாப்பிடுபவர்கள் மாட்டை தொட்டு தழுவுவதால் 10 மில்லிகிராம் மருந்து எடுத்துக் கொள்ளும் அளவிற்கு குறைந்து விடும்..
அதிலும் புற்று நோயாளிகள் மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அங்கேயே தூங்கினால், புற்று நோய் குணமடையும். மாட்டு சாணத்தை எரித்தால் கொசு தொல்லை இருக்காது எனவே, ஒரு பசு வளர்ப்பதன் மூலம் நமக்கு அனைத்து விதத்தில் பயன் அழிக்கிறது..
பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இப்படி பேசுவது ஒன்றும் தவறில்லை.., கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டபோது கூட அங்கு பசுவதை நடப்பதால் தான் இந்த இயற்கை பேரிடர் நடந்ததாக பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா கூறியது சர்ச்சையை கிளப்பியது..
அதனை தொடர்ந்து தற்போது சஞ்சய் சிங் கங்வார் பேசியதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அவரின் இந்த பேச்சு மனசாட்சி இல்லாதவர்கள் பேசுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..