‘ கல்லை தூக்கி போட்டு இளைஞர் கொலை’ நிர்வாண கோலத்தில் கிடந்த உடலால் மதுரவாயிலில் பரபரப்பு!

சென்னை மதுரவாயலில் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலைசெய்யப்பட்டு நிர்வாண கோலத்தில் கிடந்த இளைஞரின் உடலால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மதுரவாயலில் உள்ள ஆலப்பாக்கம் பலராமன் தெரு பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் உடல் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு நிர்வாண கோலத்தில் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டனர். மேற்கொண்டு அவர்கள் நடந்திய விசாரணையில் உயிரிழந்த அவர் அப்பகுதியில் கறிக்கடையில் வேலைப்பார்க்கும் அவர் முனுசாமி என்பதும் அவருக்கு வயது 30 என்பதும் தெரியவந்தது. அடிக்கடி நண்பருடன் மது அருந்தும் அவர் நேற்றும் தனது நண்பர் ஒருவருடன் மது அருந்த சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆனால் முனுசாமியுடன் மது அருந்த சென்ற நபர் யார்? முனுசாமியை அவர்தான் கொலை செய்தாரா அல்லது வேறு யாரும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

மேலும் 3 நண்பர்கள் இணைந்து தான் மது அருந்தினார் என்றும் தகவல்கள் உள்ளது. இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர்கள் முனுசாமியை அடித்து, உதைத்து நிர்வாணமாக்கிவிட்டு பின்பு அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

What do you think?

‘ம.பி அரசியலில் அடுத்த அதிரடி திருப்பம்’ பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா!

சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தின் கதை இதுவா?