உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 80 வயதை எட்டியவுடன் 20% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.
திருவண்ணாமலையில் திடீரென பெய்த மழையால் கடந்த சில நாட்களாக வீசி வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜாபேட்டை, கலவை, திமிரி, விஷாரம், சோளிங்கர், நெமிலி, மணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திடீரென பெய்த மழையின் காரணமாக கடந்த சில தினங்களாக இருந்து வந்த கோடை வெயிலின் தாக்கம் மிதமாக குறைந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலக சுற்றுச்சுவர் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மிகப் பழமையான இந்த சுற்றுச்சுவர் பலமிழந்து சரிந்து விழுந்ததில் அருகில் இருந்த தனியார் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் 20 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் முழுமையாக சேதமடைந்தது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு திமுகவைச் சேர்ந்த பெண் மேயர் சங்கீதா இன்பம் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில் ஆறு தீர்மானங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பினர். இதற்கு மேயர் சங்கீதா எந்த வித பதிலும் தெரிவிக்காமல் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனைக் கண்டித்தும் மாமன்ற கூட்டத்தை துணை மேயர் வைத்து நடத்தவும் வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியை முற்றுகையிட்டும் தரையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடலூரில் இருந்து கிளாம்பாக்கம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன்னாள் சென்ற பேருந்தை முந்த முயன்ற போது அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடிய கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் பேருந்து விபத்துக்குள்ளான உடன் அரசு பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடியதால் பயணிகள் செய்வதறியாது தவித்து நின்றனர் தகவல் அரிந்து அங்கு வந்த காவலர்கள் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டலத்துக்கு உட்பட்ட மாங்குடி சிவலோகநாதர் சுவாமி கோயில், கஞ்சனூர் சுயம்பிரகாசர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் ஆகிய கோயில்கள் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கிறது. மேலும் பந்தநல்லூரில் உள்ள செல்லியம்மன் கோயிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. இந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மயிலாடுதுறையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் தவில், நாதஸ்வரம் வித்வான்களின் இன்னிசையுடன் கோரிக்கை அடங்கிய மனுவை ஊர்வலமாக எடுத்து வந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..