உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
புதுக்கோட்டை மாவட்டம் குசலங்குளம் பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக உசிலங்குளம் தடி கொண்ட அய்யனார் கோவிலில் இருந்து திரளான பக்தர்க்கள் பால்குடங்கள், காவடி,மற்றும் அக்னி காவடி ஏந்தி வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி மாவட்டம் தொண்டா தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றனர். இதில் வெற்றிபெற்ற காளைகளுக்கு பரிசுத்தொகை மற்றும் வீட்டு உபயோகபொருட்கள் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வசந்தவாடி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கோழி பண்ணையில் இருந்து வெளியேறும் கோழி கழிவுகள் குடிநீரை மாசுப்படுத்துவதாகவும், நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் வேதனை அடைந்த மக்கள், கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கண்ணைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த சத்யா என்பவரது வீட்டில் இருந்து, 6 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் சத்யா புகார் அளித்தின் பேரில் ராஜேஷ் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் காப்புக்காட்டில் இருந்து கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளிமானை தெருநாய்கள் கடித்துள்ளது. இதில் மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. தகவலறிந்த பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ், வன மருத்துவர் மற்றும் வன காவலர்கள் மானை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மாவடியில் இருந்து மாநகரத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில், கந்தசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மானூரில் வைக்கப்பட்டிருந்த காவல்துறையினரின் சோதனை சாவடிகளையும் இடித்து விட்டு சென்றுள்ளது. பின்னர் லாரியை காவலர்கள் மடக்கி பிடித்து, மது போதையில் இருந்த ஓட்டுநர் மாரிமுத்துவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..