உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்க்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறந்த ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணைக்கினங்க, சோழிங்கநல்லூர் தெற்குபகுதி கழக செயலாளர் சரவணன் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்களுக்கு கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழங்களை வழங்கினர்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா மற்றும் குண்டம் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்தின் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலும் மற்றும் 11 மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியுடன் முடிந்து விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது விடுமுறை முடிந்த நிலையில் நடப்பாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் மலர்கள் தூவியும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். மேலும் மே 1ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு கோடை விடுமுறை விடப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
திருப்பூரில் நூல் விலை கிலோ ஒன்றுக்கு 223 முதல் 383 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் பின்னலாடை நிறுவனர்கள் மற்றும் சிறு தொழில் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு ஆடைகளை வழங்க வேண்டும் என்பதால் பெரும் இழப்பு ஏற்படக்கூடும் என்று ஏற்றுமதியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகேயுள்ள ராஜமலையில் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் 80க்கும் மேற்பட்ட வரையாட்டுக் குட்டிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக கொண்டுவரப்படும் என்று தேசிய பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 827 வரையாடுகள் ராஜமலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..