உங்கள் ஊர் செய்திகள்…!! உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று லாரியின்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலனஸ் ஓட்டுநர் முருகன் மற்றும் கல்யாணி உயிர் இழந்த நிலையில் 4பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இராசிபுரம் மருத்துவர் ஹனிமன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமைனயின் 25-வது வெள்ளிவிழா மற்றும் 270-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் ஹனிமன் சிலையை மருத்துவர் அக்பர்ஷா திறந்து வைத்தார். அதன் பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பலசரக்கு கடையில் இருந்து 6000 ரூபாய் பணம், விலை உயர்ந்த செல்போன் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளது. அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின் பெயரில் தனி படை காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எலத்தூர் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மற்றும் சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம் மற்றும் ஜவ்வாது உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..