உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பிரம்மோற்வ விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி திரு வீதி உலா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட தளவாய்பட்டடை குளம் அருகே தனிநபர் ஒருவர், தடுப்பு கம்பங்கள் நட்டதால் விளை நிலங்களுக்கு சென்று வர முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கொடைக்கானல் கிராமத்தைச் சேர்ந்த மணி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில், Winwinx Academy-ன் சார்பில் நடைபெற்ற, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வர்க்கம், கனமூலம், குறைந்த பொதுவிப்பாடு மற்றும் மிகப்பெரிய பொதுவிப்பாடு உள்ளிட்ட 50 ஆயிரத்து கணிதக் கணக்குகளை, 823 மாணவர்கள், 8 நிமிடங்களில் முடித்து உலகச் சாதனையை படைத்துள்ளனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, Ingenious Charm World Records சான்றிதழ்களை ICWR தலைமை அதிதீர்ப்பு நிபுணர் ஆனந்த் ராஜேந்திரன் மற்றும் அதிதீர்ப்பு நிபுணர் மக்லின் ஜான் வசந்த் ஆகியோர் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் குறைவான வினாடிகளின் இலக்கை எட்டிய காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 80 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 60 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 37 பேருக்கு பரிசுகளை வழங்கியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்தி மொழி மற்றும் புதிய கல்விக் கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில், ஒன்றிய அரசு செயல்படுவதாகவும், மும்மொழி மற்றும் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தின் மீது திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..