உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…! களத்தில் மதிமுகம்..!!
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூர் ஆண்டிபாளையத்தை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு காவல்துரையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு, அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் முறையான சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் வரும் கழிவு நீர் மற்றும் மழை நீர், வீடுகள் மற்றும் பள்ளிகளுக்கு முன் தேங்குவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அப்பகுதி மக்கள், துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் சதீஷ் தலைமையில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கும், ஆட்டோ சங்க நிர்வாகிகளுக்கும், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திருப்பூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் ராயபுரம், அரண்மனை புதூர், கருவம்பாளையம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. மேலும் அவிநாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலத்தின் காரணமாக மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மீன்பிடிபடகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள், மீனவர்களின் வலைகள், கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்குப்பம் பகுதியில் 100 நாள் பணிக்காக பைரவா காலணி பகுதியை சேர்ந்த 35 க்கும் மேற்பட்டோரருக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று பணிக்காக சென்றபோது உங்களுக்கு வேலை இல்லை என ஊராட்சி நிர்வாகம் திருப்பி அனுப்பியதை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 100 நாள் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சியை சேர்ந்த அஞ்சனாதேவி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலும் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அஞ்சனாதேவியின் சீமை ஓட்டு கூரையானது இடிந்து விழுந்து முற்றிலும் சேதமானது. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர் .
வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு 187.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்த நிலையில் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் தெரு பகுதியைச் சேர்ந்த கீதா வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததால் சிமெண்ட் சீட்டுகள் அனைத்தும் சேதம் அடைந்தது. உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..